சினிமா

VIDEO: ”என்ன ஒரு ஊரே வந்திருக்கு” - விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்ற மெமரிஸை பகிரும் சதீஷ்!

VIDEO: ”என்ன ஒரு ஊரே வந்திருக்கு” - விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்ற மெமரிஸை பகிரும் சதீஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 66வது படமாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் படகுழுவினர் மகிழ்ச்சியில் தத்தளித்து வருகின்றனர். இதனிடையே பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய் தனது சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸில் நாயகி பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், சதீஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் பயணித்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் பீஸ்ட் பட ரிலீஸை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன், விடிவி கணேஷ், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அதில், விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்ட் போன நிகழ்வு குறித்து நடிகரும் நடன இயக்குநருமான சதீஷ் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories