சினிமா

முன்பு ஹீரோ.. இப்போது இயக்குநர்.. புதிய களத்தில் இறங்கும் ஆஸ்கர் நாயகன் : இது 5in1_Cinema !

முன்பு ஹீரோ.. இப்போது இயக்குநர்.. புதிய களத்தில் இறங்கும் ஆஸ்கர் நாயகன் : இது 5in1_Cinema !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏப்ரல் 16ல் வெளியாகிறது `மாமனிதன்' ஆடியோ!

சீனு ராமசாமி இயக்கிய `தென்மேற்குப் பருவக்காற்று' படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் `இடம் பொருள் ஏவல்', `தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்தார். நான்காவது முறையாக `மாமனிதன்' படத்திற்காக இணைந்தது சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி. இதில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு முதன் முறையாக இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். மே 20ம் தேதி மாமனிதன் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ஆடியோ ரிலீஸ் ஏப்ரல் 16ம் தேதி புதுச்சேரியில் நடைபெற உள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் `குதிரைவால்'

ஷ்யாம் சுந்தர் - மனோஜ் இணைந்து இயக்கிய படம் `குதிரைவால்'. இதில் கலையரசன், அஞ்சலி பாட்டில், சேத்தன் எனப் பலர் நடித்திருந்தனர். வழக்கமான படமாக இல்லாம, மேஜிகல் ரியலிசம் என்ற வித்யாசமான முறையில் உருவாகியிருந்தது. திரையரங்கில் வெளியான இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. வித்யாசமான முயற்சி என கொண்டாடவும் பட்டது. தற்போது இந்தப் படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் ஏப்ரல் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

மே 20ல் வெளியாகும் `கோட்சே'

கோபி கணேஷ் இயக்கத்தில் சத்ய தேவ், ஐஸ்வர்ய லக்ஷ்மி நடித்து உருவாகியுள்ள தெலுங்குப் படம் `கோட்சே'. இதில் மேலும் பிரம்மாஜி, தணிகெல்லா பரணி, நாகபாபு எனப் பலரும் நடித்துள்ளனர்.

சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சுனில் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி மே 20ம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இயக்குநராக களம் இறங்கும் ரசூல் பூக்குட்டி!

இந்திய சினிமாவில் பல படங்களில் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியவர் ரசூல் பூக்குட்டி. இதற்காக பல விருதுகளை வென்றவர். ஸ்லெம்டாக் மில்லியனர்ஸ்' படத்திற்காக ஆஸ்கர் விருதையும் வென்றார்.

2019ல் வெளியானா `தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் ரசூல். தற்போது இயக்குநராக களம் இறங்க உள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு Otta' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அர்ஜூன் அசோகன், அசில் அலி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

வெளியானது கே.ஜி.எஃப் 2 படத்தின் சுல்தானா பாடல்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான கன்னடப்படம் `கே.ஜி.எஃப்'. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

இதன் இரண்டாம் பாகத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்திலிருந்து டீசர், டிரெய்லர், இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது பாடலாக சுல்தானா என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது.

banner

Related Stories

Related Stories