சினிமா

5in1_Cinema | இளசுகளின் கீதமான TwoTwoTwo பாடல் வீடியோ வெளியாகிறது.. OTT ரிலீசுக்கு சென்ற ஜி.வி. படம்..!

5in1_Cinema | இளசுகளின் கீதமான TwoTwoTwo பாடல் வீடியோ வெளியாகிறது.. OTT ரிலீசுக்கு சென்ற ஜி.வி. படம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளியானது `பீஸ்ட்'... வைரலான வசனம்!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த படம் `பீஸ்ட்'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இன்று இந்தப் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக படம் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் விஜய் பேசிய ஒரு வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் ஒரு காட்சியில் "எல்லாத்தையும் ட்ரான்ஸ்லேட் பண்ணி இந்தியில சொல்ல முடியாது. வேணும்னா நீ தமிழ் கத்துக்கோ" எனப் பேசியிருப்பார் விஜய். தற்போது இந்தியை இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதும், அதைத் தொடர்ந்து அதற்கு வலுத்த எதிர்பையும் பிரதிபலிப்பது போல இந்த வசனம் இருந்தது. இதனால் இந்த வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என இவர் இயக்கிய நான்கு படங்களும் சிறந்த படைப்புகளாக கொண்டாடப்பட்டது. இவர் ஐந்தாவதாக நிவின் பாலி நடிப்பில் ஒரு படத்தை இயக்கிவந்தார்.

இதில் சூரி, அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது என அறிவித்துள்ளனர். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

`காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் புதிய அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `காத்துவாக்குல ரெண்டு காதல்'. வழக்கமான விக்னேஷ் சிவன் பாணியில் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் மூன்று பாடல்களும், ஒரு டீசரும் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. அதில் Two Two Two பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நாளை இந்தப் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட உள்ளது படக்குழு. மேலும் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் திரைப்படம்!

அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன், வர்ஷா நடித்த படம் `செல்ஃபி'. கல்லூரி அட்மிஷனில் நடக்கும் குளறுபடிகளையும், அதை வியாபாரமாவது பற்றியும் இந்தப் படம் பேசியிருந்தது.

ஏப்ரல் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தப் படம் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

வெளியானது யோகிபாபுவின் `கஜானா' பட ஃபர்ஸ்ட் லுக்!

காமெடி நடிகர் யோகிபாபு நகைச்சுவை பாத்திரங்கள் மட்டுமில்லாமல் முழுநீள திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படி அவர் நாயகனாக நடித்திருக்கும் படங்களில் ஒன்று `கஜானா'. அறிமுக இயக்குநர் யாசின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இதில் ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா ஆகியோர் நடித்துள்ளனர். முதலில் இந்தப் படத்திற்கு `வீரப்பனின் கஜானா' என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக தற்போது படத்தின் பெயரை `கஜானா' என மாற்றி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories