சினிமா

பழிக்குப்பழி வாங்கினாரா யாஷ்? ப்ரஸ் மீட்டில் நடந்தது என்ன? - வீடியோ பகிர்ந்து வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!

யாஷ் ஒன்றரை மணிநேரம் தாமதமாக வந்ததால் அவரிடம் பத்திரிகையாளர்கள் ஏன் இவ்வளவு நேரம் எங்களை காக்க வைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்கள்.

பழிக்குப்பழி வாங்கினாரா யாஷ்? ப்ரஸ் மீட்டில் நடந்தது என்ன? -    வீடியோ பகிர்ந்து வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈராண்டு காத்திருப்புக்கு பிறகு கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கே.ஜி.எஃப் - 2.

இதனையடுத்து படத்தின் புரோமோஷன் வேலைகளில் யாஷ், இயக்குநர் உட்பட படக்குழுவே பம்பரம் போன்று சுழன்று வருகிறது.

அந்த வகையில் படத்தின் தெலுங்கு வெளியீட்டுக்கான புரோமோஷன் பணிகளுக்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் யாஷ் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்வுக்கு யாஷ் ஒன்றரை மணிநேரம் தாமதமாக வந்ததால் அவரிடம் பத்திரிகையாளர்கள் ஏன் இவ்வளவு நேரம் எங்களை காக்க வைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு நடிகர் யாஷ் மன்னிப்புக் கோரியிருந்தார். அதில், உங்களை காத்திருக்க வைத்ததற்காக மன்னித்து விடுங்கள். யார் எங்கு அழைத்தாலும் சென்று வருகிறேன். இப்போது நீங்கள் கேட்ட பிறகே நான் தாமதமாக வந்தது தெரிய வந்தது.

தனியார் விமானங்களில் சென்று வருவதால் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் நேரமாகிவிடுகிறது. உங்களை காக்க வைத்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அல்லு அர்ஜூனின் புஷ்பா பட புரோமோஷன் பெங்களூருவில் நடந்த போது அவர் அப்போது தாமதமாக சென்றது பேசுபொருளானது.

தற்போது KGF 2 ப்ரஸ் மீட்டிங்கின் போது தெலுங்கு பத்திரிகையாளர்களை காக்க வைத்தது அல்லு அர்ஜூனின் செயலுக்கு பழிக்கு பழி வாங்குவது போல் உள்ளது என நெட்டிசன்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories