சினிமா

இணையத்தை கலக்கும் `நாட்டு கூத்து' வீடியோ பாடல்.. KGF 2-ஆல் தள்ளிப்போகும் ஜெர்ஸி ரிலீஸ்? இது 5in1_Cinema!

இணையத்தை கலக்கும் `நாட்டு கூத்து' வீடியோ பாடல்.. KGF 2-ஆல் தள்ளிப்போகும் ஜெர்ஸி ரிலீஸ்? 
இது 5in1_Cinema!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

`குற்றம் குற்றமே' பட பாடல் வெளியானது!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `குற்றம் குற்றமே'. இதில் ஜெய், ஹரீஷ் உத்தமன், பாரதிராஜா, திவ்யா துரைசாமி எனப் பலரும் நடித்துள்ளனர். அஜீஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. வரும் ஏப்ரல் 14 தேதி கலைஞர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பாக உள்ளது இந்தப் படம். தற்போது படத்திலிருந்து `மாமன் மகளே' என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

இணையத்தை கலக்கும் `நாட்டு கூத்து' வீடியோ பாடல்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் `RRR'. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிடைந்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே நாட்டு கூத்து என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

திரையரங்கிலும் இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்தப் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது இந்த வீடியோ பாடல் வீவ்ய்ஸை அள்ளிவருகிறது.

நிவேதா பெத்துராஜின் `ப்ளடி மேரி' பட டிரெய்லர்

சந்து இயக்கத்தில் நிவேதா பெத்துராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குப் படம் `ப்ளடி மேரி'. மேலும் இதில் ப்ரம்மாஜி, அஜய், கீர்த்தி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 15ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகிறது படம்.

சரத் மாந்தவா இயக்கத்தில் ரவிதேஜா, ரஜிஷா விஜயன், த்வியன்ஷா நடித்திருக்கும் தெலுங்குப் படம் `ராமாராவ் ஆன் ட்யூடி'. மாஸ்டர் பட ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்திலிருந்து `புல்புல் தாரங்' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இந்தப் படம் ஜூன் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் ஜெர்ஸி... கே.ஜி.எஃப் 2 காரணமா?

நானி நடிப்பில் கௌதம் தின்னணுரி இயக்கி வெளியான படம் `ஜெர்ஸி'. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த ரீமேக்கையும் கௌதம் தின்னணுரியே இயக்கினார். ஷாஹித் கபூர், மிருணாள் தாக்கூர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்படுவது தொடர்ந்து நடந்தது. உறுதியாக ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்ப நிலையில் தற்போது, ஏப்ரல் 22ம் தேதிக்கு படம் தள்ளிப் போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பாலிவுட் திரையுலகிலும் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு தான் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories