சினிமா

”அடுத்த படம் நேரடி தெலுங்கு படமா? அதுலா இல்ல...” - 66வது படம் குறித்து சீக்ரெட் உடைத்த நடிகர் விஜய்!

”அடுத்த படம் நேரடி தெலுங்கு படமா? அதுலா இல்ல...” - 66வது படம் குறித்து சீக்ரெட் உடைத்த நடிகர் விஜய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் 66 தெலுங்குப் படம் இல்லை, தமிழ்ப் படம்!

`பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். இது விஜயின் 66வது படமாக உருவாகும் இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்க, கூடுதல் திரைக்கதை, வசனத்தை விவேக் எழுதவிருக்கிறார். இந்தப் படம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இது நேரடியாக தெலுங்கில் உருவாகும் படமா என கேள்வி கேட்கப்பட, "இல்லை இது தமிழில் தான் உருவாகிறது. தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி என தெலுங்கில் பிரபலமான முகங்கள் இருப்பதால் அப்படி பார்க்கப்படுகிறது. விஜய் 66 தமிழில் மட்டுமே எடுக்கப்படுகிறது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும்" எனக் கூறினார் விஜய்.

வெளியானது `ஓ மை டாக்' பட டிரெய்லர்

சரோவ் ஷண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஓ மை டாக். இந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது. அருண் விஜயின் மகன் ஆர்ணவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு சிறுவனுக்கும் அவனுடய செல்லப்பிரணிக்கும் இடையே உள்ள பாசத்தைப் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது இந்தப் படம். இதில் விஜயகுமார், அருண் விஜய், மகிமா, விநய் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 21ம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, டீசரும் வெளியானது. தற்போது இதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

தனுஷின் `நானே வருவேன்' படப்பிடிப்பு நிறைவு

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் `நானே வருவேன்'. இதில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். பரபரப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என படத்தின் நாயகன் தனுஷும், இயக்குநர் செல்வராகவனும் அறிவித்துள்ளனர்.

`பார்ட்னர்' படத்தின் ராட்டி பாடல் வெளியானது!

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சந்தோஷ் தயாநிதி இசையில் ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடலாக `ராட்டி' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

துல்கர் சல்மான் நடிக்கும் `சீதா ராமம்'

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனாவ ஆகியோர் நடிப்பில் ஹனு ராகவப்புடி இயக்கும் படம் `சீதா ராமம்'. விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது படம். தற்போது இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது இந்தப் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories