சினிமா

“திரை தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்..” : வெளியானது BEAST மூன்றாவது பாடல்! | #5in1_Cinema

‘பீஸ்ட் தீம்’ பாடல் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

“திரை தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்..” : வெளியானது BEAST மூன்றாவது பாடல்! | #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. வெளியான ‘பீஸ்ட்’ மூன்றாவது பாடல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிலீஸுக்கு தயாராகிருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கிருக்கும் இந்தப் படம் பேன் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

2. ‘அன்னபூர்ணி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் லிஜோ மோல்!

லயோனல் ஜோசுவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் "அண்ணபூர்ணி". இந்தப் படத்தில் ‘ஜெய்பீம்’ லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் வகையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

3. வைபவ்வின் ‘பபூன்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பபூன்’. அசோக் வீரப்பன் என்பவர் இயக்கிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் முதல் சிங்கிளாக ‘மடிச்சி வச்ச வெத்தல’ வெளியாகியுள்ளது.

4. அடுத்த பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற அஜித்!

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் - வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்தப் படத்தின் கதை வங்கி கொள்ளைகளை மையமாகக் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் பணிகளை துவங்குவதற்காக அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார்.

5. சூர்யாவிற்காக மற்றொரு பயோபிக் கதையை உருவாக்கும் சுதா கொங்கரா!

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி அந்தப் படம் உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் அதுவும் ஒரு சாதனையாளரின் வாழ்கை வரலாற்று கதை என தகவல் கசிந்துள்ளது.

banner

Related Stories

Related Stories