சினிமா

மாநாட்டை தொடர்ந்து மீண்டும் ஒரு லூப் படம்? - வைரலாகும் வெங்கட் பிரபுவின் ட்வீட்! இது 5in1_Cinema

மாநாட்டை தொடர்ந்து மீண்டும் ஒரு லூப் படம்? - வைரலாகும் வெங்கட் பிரபுவின் ட்வீட்! இது 5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படப்பிடிப்பு நிறைவு !

விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில், இந்திய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. இதனையடுத்து வெளிநாட்டு படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவின் ட்ரெண்டிங் வசனத்தில் களமிரங்கும் இயக்குனர் ராம்பாலா..!

தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, இடியட் என வரிசையாக ஹாரர் காமெடி படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமாகியுள்ளார் இயக்குனர் ராம்பாலா. தற்போது சந்திரமௌலி, மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா ஆகியோரின் நடிப்பில் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘தி லெஜண்ட்’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!

‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்’ சரவணன் அருள் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தி லெஜண்ட்’. சரவண ஸ்டோர் ப்ரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி வருகின்றனர். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியீட்டு உரிமை அறிவிப்பு!

லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகியுள்ள இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் மே 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர்!

மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் போன்ற தனித்துவனமான படங்களை இயக்கிய அமீர் தற்போது நல்ல குணசித்திர நடிகராகவும் வளர்ந்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்த இவர் தற்போது ‘நிலமெல்லாம் ரத்தம்’ எனும் படத்தில் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

banner

Related Stories

Related Stories