சினிமா

KGF-2 லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா..? - வெங்கட்பிரபுவின் அடுத்த படம்..! | 5in1_Cinema

வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நாக சைதன்யா நடிக்க உள்ளார்.

KGF-2 லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா..? - வெங்கட்பிரபுவின் அடுத்த படம்..! | 5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம்?

`ராதே ஷ்யாம்' ரிலீஸூக்குப் பிறகு பிரபாஸ் ஓம் ராவத் இயக்கும் `ஆதிபுருஷ்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து ப்ரஷாந்த் நீல் இயக்கும் `சலார்', நாக் அஷ்வின் இயக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படம் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஒரு குறுகிய காலத்தில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை மாருதி இயக்குவதாகவும் ராஷி கண்ணா, மாளவிகா மோகனன், ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 10ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. நாக சைதன்யா படத்தை இயக்கும் வெங்கட்பிரபு!

`மாநாடு', `மன்மதலீலை' படங்களுக்குப் பிறகு தெலுங்கு - தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் வெங்கட்பிரபு. இந்தப் படத்தில் நாயகனாக நாக சைதன்யா நடிக்க உள்ளார். படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் நாக சைதன்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சுகுமார் தயாரித்துள்ள `18 பேஜஸ்' பட டீசர்!

தெலுங்கில் புஷ்பா உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சுகுமார். படம் இயக்குவதோடு பட தயாரிப்பிலும் தீவிரமாக இயங்கிவருபவர். தற்போது இவரது சுகுமார் ரைட்டிங்க்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகியிருக்கும் படம் `18 பேஜஸ்'. இந்தப் படத்தை சூர்ய பிரதாப் இயக்கியுள்ளார். படத்தை தயரிப்பதோடு சேர்த்து படத்தின் கதையையும் எழுதியுள்ளார் சுகுமார். இந்தப் படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

4. வெளியானது மம்மூட்டியின் `சி பி ஐ' 5ம் பாகத்தின் டீசர்!

மலையாளத்தில் மிகப் பிரபலமான படம் மம்மூட்டி நடித்த CBI. 1988ல் மது இயக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பாகம், 'ஒரு சி பி ஐ டைரி குறிப்பு' படம் வெளியானது. அதைத் தொடர்ந்து மேலும் மூன்று பாகங்கள் வெளியானது. இப்போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இதனுடைய 5 பாகம் உருவாகி இருக்கிறது. இந்த பாகத்தையும் மது தான் இயக்கியிருக்கிறார். மேலும் இதில் மம்மூட்டி உடன் ரெஞ்சி பணிக்கர், சௌபின் சாஹிர், ஆஷா ஷரத், சாய்குமார் நடித்துள்ளனர். தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

5. கே.ஜி.எஃப்-2 இரண்டாம் பாடல் ரிலீஸ்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான கன்னடப்படம் `கே.ஜி.எஃப்'. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கெனவே இப்படத்திலிருந்து டீசர், டிரெய்லர், தூஃபான் என்ற பாடல் வெளியான நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் பாடலாக அகிலம் நீ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

banner

Related Stories

Related Stories