சினிமா

விஜய் பட ’நடிகர்கள்’ இணையும் இயல்வது கரவேல்.. கதைக்களம் என்ன தெரியுமா? அண்மையில் கசிந்த தகவல் இதோ!

கதிர் மற்றும் மகேந்திரன் நடிக்கும் இயல்வது கரவேல் படத்தின் கதை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பட ’நடிகர்கள்’ இணையும் இயல்வது கரவேல்.. கதைக்களம் என்ன தெரியுமா? அண்மையில் கசிந்த தகவல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய கவனம் ஈர்த்த நடிகர் ‘கதிர்’. அதுபோல, விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ‘மகேந்திரன்’. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் திரைப்படம் ‘இயல்வது கரவேல்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்துவருகிறது.

விஜய் பட ’நடிகர்கள்’ இணையும் இயல்வது கரவேல்.. கதைக்களம் என்ன தெரியுமா? அண்மையில் கசிந்த தகவல் இதோ!

அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ் ஹென்ரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான். இப்படத்துக்கு பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றிய ஸ்ரீதர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்துக்கான கலை இயக்குநராக மாயப்பாண்டி பணியாற்றிவருகிறார். சூர்யா நடிக்க பாலா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கும் இவரே கலை இயக்குநரென்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட ’நடிகர்கள்’ இணையும் இயல்வது கரவேல்.. கதைக்களம் என்ன தெரியுமா? அண்மையில் கசிந்த தகவல் இதோ!

திண்டிவனத்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்துக்கான 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவுடைந்துவிட்டது. எமினென்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க முழுக்க முழுக்க யூத் டீமுடன் இப்படம் உருவாகிவருகிறது ‘இயல்வது கரவேல்’. கல்லூரியில் நடப்பது போன்ற கதைக்களம். கல்லூரியில் நடக்கும் எலெக்‌ஷனை மையமாக் கொண்டு சோசியல் மெசேஜ் பேசும் படமாக உருவாகிவருகிறது.

படத்தில் நாயகனாக கதிரும், நாயகியாக யுவலட்சுமி நடித்துள்ளார். மாஸ்டரைப் போல இந்தப் படத்திலும் முக்கிய ரோலில் மகேந்திரன் நடித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories