சினிமா

”வெறும் இரண்டே காட்சிகள்தான்; ‘அஜித் 61’ படத்தின் கதைக்களம் இதுதானா..?” - வெளியானது அப்டேட் !

”வெறும் இரண்டே காட்சிகள்தான்; ‘அஜித் 61’ படத்தின் கதைக்களம் இதுதானா..?” - வெளியானது அப்டேட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மே மாத ரிலீஸை உறுதிப்படுத்திய மகேஷ் பாபு படக்குழு...

முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘சர்காரு வாரி பட்டா’. பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு தென்னிந்திய அளவில் உள்ளது. நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்த படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

சுந்தர்.சி படத்தில் மங்கம்மாவாக நடிக்கும் மாளவிகா...

சுந்தர்.சி தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகியோரை வைத்து ஒரு கமர்ஷியல் காமெடி படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகிகளாக அம்ருதா ஐயர்,ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க மனோபால, மாளவிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில் மாளவிகாவின் கேரக்டர் பெயர் மங்கம்மா என சொல்லப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாளவிகா நடிப்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

‘அக்னி சிறகுகள்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது...

மூடர்கூடம் இயக்குனர் நவீன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘அக்னி சிறகுகள்’. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிக்க அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கின்றனர், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருவதாகவும் விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்றும் இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘அஜித் 61’ படத்தின் கதைக்களம் இதுதானா..?

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜித் - வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளைகளை மையமாக கொண்டது என்றும் ஸ்டேண்ட் காட்சிகளுக்கு வலிமை படத்தை போல அதிக முக்கியதுவம் இல்லாமல் இரண்டு சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரன்பீர் கபூரின் நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா!

தெலுங்கு திரையுலகில் கலக்கி வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். தமிழ், தெலுங்கை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஷ்மிகா இதற்கு முன்னதாக 'மிஷன் மஜ்னு' மற்றும் 'குட்பை' ஆகிய இந்திப் படங்களில் நடித்து முடித்திருக்கும் நிலையில், பாலிவுட்டில் இது அவருக்கு மூன்றாவது படமாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories