சினிமா

13yearsofayan : ”புரோமோ பாக்குறதுக்காகவே..” - அயன் பட நினைவலைகளை பகிரும் ரசிகர்கள்!

சூர்யாவின் அயன் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனைதை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

13yearsofayan : ”புரோமோ பாக்குறதுக்காகவே..” - அயன் பட நினைவலைகளை பகிரும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் சூர்யா. அவரது ஆல் டைம் ஹிட் பட்டியலில் இருக்கும் ‘அயன்’ படத்துக்கு வயது 13.

ஆம், 2009ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தமன்னா, பிரபு, சிட்டி ஜகன், பொன்வண்ணன் என பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. வைரமுத்து, பா.விஜய், நா.முத்துகுமார் ஆகியோரது பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

வெளிநாடுகளில் இருந்து வைரம், போதை பொருட்கள் என பலவற்றை நூதன முறையில் இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வரும் துடிப்பான இளைஞனின் செயலை மையமாகக் கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த திரைப்படமாக அயன் இருந்தது.

20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 13 ஆண்டுகளுக்கு முன்பே 80 கோடி ரூபாய் வசூல் செய்து சூர்யாவுக்கு ஒரு ட்ரேட் மார்க் கொடுக்கும் படமாகவே அமைந்தது.

படத்தின் பாடல்கள், காட்சிகள் அனைத்தும் இளசுகளிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. கே.வி.ஆனந்த் அடிப்படையிலேயே ஒளிப்பதிவாளராக இருந்ததால் அவரது இயக்கத்திலான அயன் படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமாகவே இருந்திருக்கும்.

13yearsofayan : ”புரோமோ பாக்குறதுக்காகவே..” - அயன் பட நினைவலைகளை பகிரும் ரசிகர்கள்!

இப்படி இருக்கையில் அயன் படம் வெளியாகி இன்றோடு சரியாக 13 ஆண்டுகள் ஆனதை அடுத்து சூர்யாவின் ரசிகர்களும், தமிழ் சினிமாவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு அயன் படத்துடனான நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதில், கமர்ஷியல் ரீதியிலான வெற்றி படங்கள் வரிசையில் அயன் படத்துக்கு இணையாக இதுகாறும் எந்த படமும் இல்லை என்று பதிவு செய்து வருகிறார்கள். இதனையடுத்து #13yearsofayan என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

banner

Related Stories

Related Stories