சினிமா

அப்போ அர்ஜூன் ரெட்டி; இப்போ ஜெர்சி: தெலுங்கு படங்களின் ரீமேக்கில் கலக்கும் ஷாஹித் கபூர் - சினிமா துளிகள்!

அப்போ அர்ஜூன் ரெட்டி; இப்போ ஜெர்சி: தெலுங்கு படங்களின் ரீமேக்கில் கலக்கும் ஷாஹித் கபூர் - சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிதினுடன் கைகோர்க்கும் வக்கந்தம் வம்சி!

தெலுங்கு சினிமாவில் `கிக்', `ரேஸ்குர்ரம்', `டெம்பர்' போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கதை எழுதியவர் வக்கந்தம் வம்சி. 2018ல் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான `நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது இவர் இயக்கதில் இரண்டாவது படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் நிதின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

`கனி' படத்தின் மேக்கிங் வீடியோ

கிரண் இயக்கத்தில் வருண் தேஜ் நடித்துள்ள படம் `கனி'. சாய் மஞ்சரேகர் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் உபேந்திரா, சுனில், நதியா எனப் பலரும் நடித்துள்ளனர்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்தப் படம். ஏப்ரல் 8ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

நிவின் பாலி நடித்த `மஹாவீர்யார்' பட டீசர்!

மலையாளத்தில் `1983', `ஆக்ஷன் ஹீரோ பிஜூ', `பூமரம்' ஆகிய படங்களை இயக்கியவர் அப்ரித் ஷைன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான `குங்க்ஃபூ மாஸ்டர்' படம் பெரிய எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.

தற்போது தனது அடுத்த படமான `மஹாவீர்யார்' படத்தை இயக்கிவருகிறார். இதில் நிவின் பாலி நாகனாக நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.

ஓடிடியில் வெளியாகும் `அந்தாக்ஷரி'

விபின் தாஸ் இயக்கத்தில் சய்ஜூ க்ரூப், விஜய் பாபு, ப்ரியங்கா நாயர் எனப் பலரும் நடித்துள்ள மலையாளப் படம் `அந்தாக்ஷரி'. ஒரு காவல் அதிகாரியை மையப்படுத்திய த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

விரைவில் ஓடிடி தளமான சோனி லைவ் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

ஷாஹித் கபூரின் `ஜெர்சி' பட டிரெய்லர் வெளியானது!

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நானி நடித்து வெளியான தெலுங்குப் படம் `ஜெர்சி'. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. இதற்குக் கிடைத்த வரவேற்பினால் படத்தை அதே பெயரில், இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார் கௌதம் தின்னனுரி. இதில் ஷாஹித் கபூர், ம்ரூனால் தாக்கூர் நடித்துள்ளனர்.

கொரோனா காரணமாக தாமதமாகி வந்தது இந்தப் படத்தின் ரிலீஸ். சமீபத்தில் படத்தின் புதிய தேதியாக ஏப்ரல் 14ம் தேதியை அறிவித்தனர். இன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு

banner

Related Stories

Related Stories