சினிமா

BeastModeON | வெளியானது பீஸ்ட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி - குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!

BeastModeON | வெளியானது பீஸ்ட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி - குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65வது படமாக உருவாகியுள்ளது பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும் செல்வராகவன், யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் பட்டையக்கிளப்பி வருகிறது.

இதனையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த வேளையில், பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகிற ஏப்ரல் 2ம் தேதி பீஸ்ட் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே பீஸ்ட் படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடா, தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories