சினிமா

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் முக்கியமான படங்கள் இவைதான்..! #CinemaUpdates

'ஹே சினாமிகா’ திரைப்படம் மார்ச் 31ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் முக்கியமான படங்கள் இவைதான்..! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. `மாமன்னன்' பட முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

`பரியேறும் பெருமாள்', `கர்ணன்' படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் `மாமன்னன்'. இந்தப் படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்று முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

https://twitter.com/RedGiantMovies_/status/1508676595183017985

2. `மன்மத லீலை' படத்தின் முதல் பாடல் வெளியானது!

மாநாடு பட் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `மன்மத லீலை'. அஷோக் செல்வன், சம்யுக்தா, ரியா சுமன், ஸ்ம்ருதி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. தற்போது பிரேம் ஜி இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து `வா கணக்கு பாக்காம' என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. கங்கை அமரன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை ஸ்வாகதா - அஜய் கிருஷ்ணா பாடியுள்ளனர்.

Hey Sinamika on Jio Cinemas Mar 31 Netflix Apr 1

3. ஓடிடியில் வெளியாகும் `ஹே சினாமிகா'

பிரபல நடன இயக்குநர் பிருந்தா. இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடன இயக்குநராக பணியாற்றி வந்தவர் `ஹே சினாமிகா' படம் மூலம் இயக்குநராக களம் இறங்கினார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைதரி, காஜல் அகர்வால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்கில் வெளியானது. தற்போது இந்தப் படம் மார்ச் 31ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.

4. விஜய் தேவரகொண்டாவின் `JGM' போஸ்டர் வெளியானது!

தெலுங்கில் பல வெற்றி படங்களை இயக்கியவர் பூரி ஜெகன்னாத். தற்போது இவர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர்' படம் உருவாகியிருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த `லைகர்' ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இன்று அந்தப் படத்தின் பெயர் JGM' என்று அறிவித்து, படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டா இராணுவ வீரராக நடிக்கும் இந்தப் படம், 2023 ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

5. அமேஸான் ப்ரைமில் வெளியாகும் `பட'

கே.எம்.கமல் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், விநாயகன், திலீஷ் போத்தன் நடிப்பில் உருவான படம் `பட'. இந்தப் படம் கடந்த மார்ச் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 1996ல் பாலக்காட்டில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவானது இந்த திரைப்படம்.

மேலும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் நாளை அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories