சினிமா

5in1 cinema | பகத் சிங்கின் வரியை கோடிட்டு காட்டிய ப்ரித்விராஜ்.. வெளியானது ஜன கன மன ட்ரெய்லர்!

5in1 cinema | பகத் சிங்கின் வரியை கோடிட்டு காட்டிய ப்ரித்விராஜ்.. வெளியானது ஜன கன மன ட்ரெய்லர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ப்ரித்விராஜின் `ஜன கன மன' டிரெய்லர் வெளியீடு!

ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ப்ரித்விராஜ் - சுராஜ் நடித்திருக்கும் மலையாளப்படம் ஜன கன மன. ப்ரிவிராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வரும் நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட இந்தப் படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

மம்மூட்டி தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம்!

மம்மூட்டி நடிகராக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். லிஜோ ஜோஷ் பெல்லிஷெரி இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படம் `நண்பகல் நேரத்து மயக்கம்'. இந்தப் படத்தை மம்மூட்டி கம்பெனி என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்குகிறார். தற்போது மம்மூட்டி தனது தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படத்தையும் தயாரிக்கத் துவங்கிவிட்டார். மம்மூட்டியே நாயகனாகவும் நடிக்கும் இந்தப் படத்தை நிஷாம் பஷீர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது `விக்ராந்த் ரோணா' டீசர்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். இவர் நடிப்பில் தற்போது ரிலீஸுக்குத் தயாராகி வரும் படம் `விக்ராந்த் ரோணா'. அனூப் பண்டாரி இயக்கியிருக்கும் இந்தப் படம் கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

5in1 cinema | பகத் சிங்கின் வரியை கோடிட்டு காட்டிய ப்ரித்விராஜ்.. வெளியானது ஜன கன மன ட்ரெய்லர்!

மேலும் இந்தப் படம் 3டியில் வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருண் தவான் - ஜான்வி கபூர் நடிக்கும் `பவால்'

ஆமீர்கான் நடித்த `டங்கல்' படத்தை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இதன் பின் இவர் இயக்கிய `சிச்சோரே' படமும் மிகப்பெரிய வெற்றியடையந்தது. தற்போது இவர் அடுத்ததாக `பவால்' என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் வருண் தவான், ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார்கள். சஜித் நடியாவாலா இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் இந்தப் படம் 2023 ஏப்ரல் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5in1 cinema | பகத் சிங்கின் வரியை கோடிட்டு காட்டிய ப்ரித்விராஜ்.. வெளியானது ஜன கன மன ட்ரெய்லர்!

`டாப் கன் மெர்விக்' படத்தின் புதிய டிரெய்லர்

ஜோசப் கோசின்ஸ்கி (Joseph Kosinski) இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்துள்ள படம் `டாப் கன் மெர்விக்'. 1986ல் வெளியான `டாப் கன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது இந்தப் படம். 2019 ஜூலையில் இந்தப் படத்தை வெளியிட முதலில் முடிவு செய்திருந்தார்கள். கொரோனா காரணமாக இந்த வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. மறுபடியும் சில தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது. தற்போது வரும் மே 27ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தின் புதிய டிரெய்லர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories