சினிமா

5in1_cinema |”கேங்ஸ்டர் படத்தில் சன்னி லியோன்.. இந்தியில் ரீமேக்காகும் ராக்கி” - சினி துளிகள்!

5in1_cinema |”கேங்ஸ்டர் படத்தில் சன்னி லியோன்.. இந்தியில் ரீமேக்காகும் ராக்கி” - சினி துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீஸ்ட் ட்ரெய்லர் எப்போது?

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படம் `பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனை இயக்கும் `மன்டேலா' இயக்குநர்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் `டான்' படம் மே 13ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் `அயலான்', தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறது என தகவல்கள் உலவுகிறது. இந்தப் படத்தை `மன்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார் எனவும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்னேஷனல் இந்தப் படத்தை தயாரிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.

`கொட்டேஷன் கேங்க்' பட போஸ்டர் வெளியானது!

அருண் விஜய் - ரித்திகா சிங் நடிப்பில் `பாக்ஸர்' படத்தை இயக்கியவர் விவேக். பாக்ஸிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகாத நிலையில், அவரது அடுத்த படமாக `கொட்டேஷன் கேங்' படத்தை அறிவித்தார். ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், ப்ரியாமணி, சாரா அர்ஜூன் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். எட்டு வருடங்களுக்குப் பிறகு ப்ரியாமணி நடிக்கும் தமிழ் படம் இது. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியில் ரீமேக்காகும் `ராக்கி'

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் `ராக்கி'. வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டது. சென்ற வருட இறுதியில் வெளியான இந்தப் படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என அறிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். `ராக்கி'யின் இந்தி ரீமேக் உரிமையை Wakaoo Films நிறுவனம் வாங்கியிருக்கிறது.

`பார்ட்னர்' பட போஸ்டர் வெளியானது!

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்யா வெளியிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories