சினிமா

64வது க்ராமி விருது விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் OTT தளம்.. `பதான்' ஷூட்டிங் அப்டேட்..! #CinemaUpdates

ஸ்பைனில் சில பகுதிகளில் நடந்து வந்த `பதான்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது.

64வது க்ராமி விருது விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் OTT தளம்.. `பதான்' ஷூட்டிங் அப்டேட்..! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ஷாரூக்கானின் `பதான்' பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், ஜான் ஆப்ரஹாம், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் உருவாகும் இந்திப் படம் `பதான்'. பாலிவுடின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான, யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இது ஒரு ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஸ்பைனில் நடந்து வந்தது. அங்கு மலோர்க்கா பகுதியில் ஷாரூக் - தீபிகா நடனமாடும் பாடலின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. மேலும் ஸ்பைனில் சில பகுதிகளில் நடந்து வந்த `பதான்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது.

2. `ப்ரம்மாஸ்த்ரா' படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்தது!

அயன் முகெர்ஜி இயக்கத்தில் உருவாகி வந்த படம் `ப்ரம்மாஸ்த்ரா'. இதில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடித்தனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாக படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கியது. பிரம்மாண்டமாக தயாராகும் படம் என்பதாலும், கொரோனா நெருக்கடிகள் காரணமாகவும் பல சிக்கல்களைத் தாண்டி இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது `ப்ரம்மாஸ்த்ரா'வின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என அறிவித்திருக்கிறது படக்குழு. மேலும் இந்த முதல் பாகம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ளது.

3. 64வது க்ராமி விருது விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓடிடி தளம்!

திரைப்படங்களுக்கான உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. அந்த விருது நிகழ்வு நேற்று நடந்து முடிந்தது. அடுத்து இசை உலகின் பெரிய அங்கீகாரமான க்ராமி விருது விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த 64வது க்ராமி விருதுகள், கொரோனா காரணமாக பல முறை தள்ளிவைகப்பட்டு, தற்போது ஏப்ரல் 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை ட்ராவர் நோவா (Trevor Noah) தொகுத்து வழங்க இருக்கிறார். இந்திய நேரப்படி ஏப்ரல் 4ம் தேதி காலை 5.30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்வை சோனி லைவ் ஓடிடி தளம் நேரடியாக ஒளிப்பரப்ப இருக்கிறது.

4. விபத்திலிருந்து மீண்டு வந்த நடிகர் சாய் தரம் தேஜ்!

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் சாய் தரம் தேஜ். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான `ரிபப்ளிக்' படத்திற்குப் பிறகு, கார்த்திக் தண்டு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கினார் சாய்.

சிகிச்சைகள் முடிந்து ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, இன்று மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பி இருக்கிறார். இவர் குணமாகி வந்ததை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி, வரவேற்றது படக்குழு. இது சாஜ் தரம் தேஜ் நடிக்கும் 15வது படமாக உருவாகிறது.

banner

Related Stories

Related Stories