சினிமா

OTT-யில் ரிலீஸ் ஆகும் `ராதே ஷ்யாம்', `பீஷ்ம பர்வம்' - தேதி அறிவிப்பு! #CinemaUpdates

`ராதே ஷ்யாம்' படம் ஏப்ரல் 1ஆம் தேதி அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

OTT-யில் ரிலீஸ் ஆகும் `ராதே ஷ்யாம்', `பீஷ்ம பர்வம்' - தேதி அறிவிப்பு! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. வருண் தேஜ் நடிக்கும் புதிய படம் துவங்கியது!

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் வருண் தேஜ். இவர் நடிப்பில் `கனி' ஏப்ரல் 8ஆம் தேதியும், F3 மே 27ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் உடனடியாக தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் வருண். இது வருண் தேஜ் நடிக்கும் 12வது படம். மிக்கி ஜே மேயர் இசையமைக்கும் இந்தப் படத்தை ப்ரவீன் இயக்குகிறார். இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

2. நாக சௌர்யாவின் Krishna Vrinda Vihari பட டீசர்!

தெலுங்கு நடிகர் நாக சௌர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `க்ரிஷ்ணா வ்ரிந்த விஹாரி' (Krishna Vrinda Vihari). பிரபல இந்தி பாடகி ஷிர்லி (Shirley) இந்தப் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அனிஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்தப்படம். தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். விரைவில் திரைக்கு வர இருக்கிறது படம்.

3. அமேஸான் ப்ரைமில் வெளியாகிறது பிரபாஸின் `ராதே ஷ்யாம்'

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வெளியான படம் `ராதே ஷ்யாம்'. கடந்த மார்ச் 11ஆம் தேதி இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமில்லாது பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரம்மாண்டமான படமாக உருவாகியிருந்தாலும், கலவையான விமர்சனங்களே படத்திற்கு கிடைத்தது. தற்போது இந்தப் படம் ஏப்ரல் 1ஆம் தேதி அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கைப் போலவே, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாக இருக்கிறது ராதே ஷ்யாம்.

4. ஹாட்ஸ்டாரில் வெளியாகிறதா மம்மூட்டியின் `பீஷ்ம பர்வம்'?

அமல் நீரத் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான மலையாளப்படம் `பீஷ்ம பர்வம்'. மம்மூட்டியுடன் சௌபின் சாஹிர், நதியா, திலீஷ் போத்தன் மறைந்த கலைஞர்களான நெடுமுடி வேணு, லலிதா எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூலில் பெரிய சாதனையும் செய்தது. தற்போது இந்தப் படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என தகவல்கள் வந்திருக்கிறது.

5. ஜூன் 28ல் `Only Murderers on the building' இரண்டாவது சீசன்!

hulu மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் வெளியான வெப் சீரிஸ் Only Murderers on the building. இதில் பிரபல ஹாலிவுட் பாடகி செலீனா கோம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காமெடியான இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவான இந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் முதல் சீசன் முடியும் பொழுது இரண்டாம் சீசனுக்கான கேள்வியோடு முடிந்தது. ரசிகர்களும் இரண்டாவது சீசனுக்கு ஆவலாக காத்திருந்தனர். தற்போது இதன் இரண்டாவது சீசன் ஜூன் 28ம் தேதி hulu தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories