சினிமா

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த பாலா-சூர்யா கூட்டணி.. சிங்கப்பெண்ணாக நடிக்கும் ஷில்பா! #5in1_Cinema

கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சரண்யா.

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த பாலா-சூர்யா கூட்டணி.. சிங்கப்பெண்ணாக நடிக்கும் ஷில்பா! #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. மீண்டும் இணைந்த பாலா - சூர்யா கூட்டணி, படப்பிடிப்பு துவக்கம்!

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் பாலா இயக்கத்தில் நடித்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து `அவன் இவன்' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருக்கிறது. இது சூர்யா நடிக்கும் 41வது படம். மேலும் இதில் க்ரித்தி ஷெட்டி, மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் இன்று கன்னியாகுமரியில் துவங்கியிருக்கிறது.

2. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் `கோலி சோடா 1.5'

விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ல் வெளியான படம் `கோலி சோடா'. புதுமுகங்களை வைத்து, குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பெரிய வெற்றியடைந்தது. தொடர்ந்து கோலி சோடா 2' படத்தையும் இயக்கினார் விஜய் மில்டன். தற்போது கோலி சோடா 1.5'ஐ துவங்கியிருக்கிறார். இது திரைப்படமாக இல்லாமல், வெப் சீரிஸாக இயக்குகிறார். கோலி சோடா மற்றும் கோலி சோடா 2 இந்த இரண்டுக்கும் இடையில், அதில் நடித்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை இந்த வெப் சீரிஸில் கதையாக சொல்ல இருக்கிறார். ஹாட்ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

3. கேங்க்ஸ்டராக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன்!

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் சரண்யா பொன்வண்ணன். குறிப்பாக பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இவர் தற்போது விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஒரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சரண்யா. படத்திற்கு `கேங்க்ஸ்டர் க்ரானி (Gangster Granny) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

4. ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் `சிங்கப்பெண்ணே'

காளி, `ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். தற்போது இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் `சிங்கப்பெண்ணே'. ஜே.எஸ்.பி சதீஷ் இயக்கும் இந்தப் படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

5. சசிகுமார் நடிக்கும் `காரி' பட போஸ்டர் வெளியானது!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக படங்கள் நடித்து வருபவர் சசிக்குமார். தற்போது இவர் அடுத்ததாக ஹேமந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு `காரி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பார்வதி அருண், சம்யுக்தா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories