சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை அசால்ட்டாக மிஞ்சும் ‘KGF 2’ - என்ன நடக்கிறது? #CinemaUpdates

விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்திருக்கும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்கள் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை அசால்ட்டாக மிஞ்சும் ‘KGF 2’ - என்ன நடக்கிறது? #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திரையுலகின் இன்றைய முக்கிய அப்டேட்ஸ் இங்கே..!

1. 30 வருடங்களுக்கு பிறகு இணையும் பாக்யராஜ் - ஐஸ்வர்யா ஜோடி!

ஒலிம்பியா மீவிஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் நான்காவது படத்தை இயக்குனர் கணேஷ்.கே பாபு என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நாயகனாக கவினும் நாயகியாக அபர்ணா தாஸும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ‘ராசுக்குட்டி’ (1992) என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

2. சவுதியில் வெளியான சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்திருக்கும் இந்த படத்தை தற்போது சவுதி அரேபியாவிலும் ரிலீஸ் செய்துள்ளனர்.

தற்போது வரை 175 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் இந்த படத்திற்கு சவுதியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3. விரைவில் லாரண்ஸின் ‘ருதரன்’ பட போஸ்டர் வெளியாகும்!

ராகவா லாரண்ஸ் நடிப்பில் உருவாகிவரும் படங்களில் ஒன்று ‘ருத்ரன்’. ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்ஸ் கதிரேசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடிக்க சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

4. எதிர்பார்ப்பில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை மிஞ்சும் ‘கே.ஜி.எஃப் 2’

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த வலிமை, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகிவிட்ட நிலையில் நாளை ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை அசால்ட்டாக மிஞ்சும் ‘KGF 2’ - என்ன நடக்கிறது? #CinemaUpdates

இதனை தொடர்ந்து மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்கள் விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்திருக்கும் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த இருபடங்களும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை அசால்ட்டாக மிஞ்சும் ‘KGF 2’ - என்ன நடக்கிறது? #CinemaUpdates

இதில் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க 1 லட்சம் பேரும் கே.ஜி.எஃப் 2 படத்தைகான 5 லட்சத்திற்கு அதிகமானவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் பீஸ்ட் படத்தின் வசூலை கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தட்டிச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

5. டிஜிட்டல் தளத்தில் மம்முட்டியின் ‘பீஷ்மபர்வம்’

மலையாள சினிமா துறையின் ஜாம்பவான் நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் தான் அமல் நீரத் இயக்கிருந்த ‘பீஷ்ம பர்வம்’.

கேங்க்ஸ்டர் படமாக உருவாகிருந்த இந்த படத்திற்கு மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸுக்கான வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் படம் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories