சினிமா

துல்கர் சல்மான் நடிக்கும் வெப் சீரிஸ்.. 'அவதார் 2' டீசர் எப்போது..? #CinemaUpdates

விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது துல்கர் சல்மான் நடிக்கும் வெப் சீரிஸ்.

துல்கர் சல்மான் நடிக்கும் வெப் சீரிஸ்.. 'அவதார் 2' டீசர் எப்போது..? #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ஜான் ஆப்ரஹாமின் `அட்டாக்' பட டிரெய்லர்!

லக்ஷ்யா ராய் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம், ஜாகுலின் ஃபெர்னாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் இந்திப் படம் `அட்டாக்'. இதில் நடித்ததுடன், இந்தப் படத்தின் கதையையும் எழுதியிருக்கிறார் ஜான் ஆப்ரஹாம். இரண்டு பாகங்களாக படத்தை எடுக்க இருக்கிறார்கள். தற்போது முதல் பாகம் தயாராகிவிட்டது, படத்தை ஏப்ரல் 1ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ஏற்கெனவே படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.

2. துல்கர் சல்மான் நடிக்கும் வெப் சீரிஸ்!

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பவர் துல்கர் சல்மான். இவர் முதன் முறையாக நடிக்கும் வெப் சீரிஸ் `கன்ஸ் அன்ட் குலாப்ஸ்' (Guns and Gulaabs). ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமான ராஜ் - டிகே என்ற இரட்டை இயக்குநர்கள் தான் இந்த சீரிஸையும் இயக்குகிறார்கள். இந்தியில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் துல்கருடன் ராஜ்குமார் ராவ், கௌரவ் ஆதர்ஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது இந்த வெப் சீரிஸ்.

3. இந்தியாவில் வெளியாகிறது வில் ஸ்மித்தின் `கிங் ரிச்சர்ட்'

ஹாலிவுடில் புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித். இவரது நடிப்பில் உருவான படம் `கிங் ரிச்சர்ட்' (King Richard). அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் இருவரையும், அவர்களின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் எப்படி பயிற்சி அளித்தார் என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. வெளிநாடுகளில் சென்ற வருடமே இந்த படம் வெளியாகிவிட்டது. பல விருதுகளை வென்றிருக்கிறது கூடவே ஆஸ்கரிலும் பல பிரிவுகளில் நாமினேட் ஆகியிருக்கிறது. தற்போது இந்தப் படம் மார்ச் 25ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

4. `அவதார் 2' பட டீசர் வெளியாகிறதா?

2009ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய `அவதார்'. இதனுடைய அடுத்த அடுத்த பாகங்களும் வரும் என அப்பொழுதே அறிவித்திருந்தார் கேமரூன். ஆனால் பல வருடங்கள் ஆகியும் அவதாரின் அடுத்த ஒரு பாகம் கூட வெளியாகவில்லை. சில மாதங்களுக்கு முன் அவதார் 2, டிசம்பர் 16ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்போது அவதார் 2 படத்தின் டீசர், மே 6ம் தேதி வெளியாகும் டாக்டர் ஸ்ட்ரேஜ் படத்துக்கு இடையே திரையிடப்படும் என தகவல்கள் உலவுகிறது.

5. `மூன் நைட்' சீரிஸிலிருந்து வெளியான காட்சி!

மார்வல் காமிக்ஸை மையமாக வைத்து உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் மூன் நைட். ஒரு சூப்பர் ஹீரோ கதையாக இருந்தாலும், ஒரு சைக்கலாஜிகல் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கிறது.

மார்ச் 30 முதல் வாரம் ஒரு எப்பிசோட் வீதம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த சீரிஸில் இருந்து ஒரு காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories