சினிமா

ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது 'பீஸ்ட்' - ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? : சினிமா துளிகள் #CinemaUpdates

'பீஸ்ட்’ படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது 'பீஸ்ட்' - ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? : சினிமா துளிகள் #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது விஜய்யின் பீஸ்ட்!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படம் `பீஸ்ட்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. விரைவில் படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. கேங்க்ஸ்டராக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன்!

மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். தற்போது தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார். பல படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு வரவேற்கப்பட்டது. தற்போது விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் ஒரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சரண்யா. 

ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது 'பீஸ்ட்' - ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? : சினிமா துளிகள் #CinemaUpdates

3. `மாஸ்டர்' பட பாடகரின் புதிய பாடல்!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற மாஸ்டர் த ப்ளாஸ்டர் பாடலைப் பாடியவர் பிஜோன். இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பலரது ப்ளே லிஸ்டில் இடம்பிடித்தது. தொடர்ந்து அறிவுடன் இணைந்து சி.எஸ்.கே ஆந்தம் பாடலையும் பாடியிருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் குரலில் புதிய பாடல் உருவாகியிருக்கிறது. `ஹே பேபி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

4. ஹன்சிகாவின் `மை நேம் இஸ் ஸ்ருதி' பட பாடல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் இவர் நடித்துள்ள `மகா' விரைவில் வெளியாக வர இருக்கிறது. தெலுங்கில் `மை நேம் இஸ் ஸ்ருதி' படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு மார்க் கே ராபின் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலாக `ரெப்பே வேசே லோகா' (Reppe Vese Loga) வெளியாகியிருக்கிறது. விரைவில் `மை நேம் இஸ் ஸ்ருதி' வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

5. அல்போன்ஸ் புத்ரனின் `கோல்டு' பட டீசர்!

நேரம், ப்ரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இதற்கு அடுத்ததாக ஃபகத் பாசில் நடிப்பில் `பாட்டு' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்தப் படம் துவங்கப்படாததால், ப்ரிவிராஜ் நடிப்பில் `கோல்டு' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கத்தில் வரும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories