சினிமா

“இந்த மண்ணோட கதைக்கு மன்னனே” ஒரே பாடலில் மொத்த அப்டேட்டையும் கொடுத்த KGF படக்குழு; கொண்டாடும் ரசிகர்கள்!

ஊரடங்கு காரணமாக தொடர்ந்து தள்ளிப்போன கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸுக்கு அனைத்து மொழி ரசிகர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

“இந்த மண்ணோட கதைக்கு மன்னனே” ஒரே பாடலில் மொத்த அப்டேட்டையும் கொடுத்த KGF படக்குழு; கொண்டாடும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எஃப்’. யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மற்ற இந்திய மொழி ரசிகர்களும் நல்ல வரவேற்பு அளித்திருந்தனர்.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலைகள் தீவிரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது, இதில் மெயின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அதீரா எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து தள்ளிப்போன கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸுக்கு அனைத்து மொழி ரசிகர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இது போக, ரவீனா டன்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த சலாம் ராக்கி பாய், தீரா தீரா போன்ற பாடல்களை போல தற்போது இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள டூஃபான் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தை போலவே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளிலும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வெறும் பாடலாக மட்டும் இல்லாமல் படத்தின் ரிலீஸ் தேதியையும், ட்ரெய்லர் வெளியாகும் தேதியை குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகும் கே.ஜி.எஃப். 2 படத்தின் ட்ரெய்லர் மார்ச் 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories