சினிமா

200 மில்லியனை கடந்து தொடர் சாதனை படைக்கும் அரபிக்குத்து; ஹீரோவாகும் ’கோமாளி’ புகழ்..! - சினி அப்டேட்ஸ்

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது

200 மில்லியனை கடந்து தொடர் சாதனை படைக்கும் அரபிக்குத்து; ஹீரோவாகும் ’கோமாளி’ புகழ்..! - சினி அப்டேட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ஹீரோவாகும் குக்வித் கோமாளி புகழ்..! படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு...

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடியான நடித்து வருபவர் தான் புகழ். வேலை, என்னவளே ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் புகழ் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

‘மிஸ்டர் ஜு கீப்பர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷஙக்ர் ராஜா இசையமைக்கவுள்ளார். புகழ் பிரபலமான சமையல் நிகழ்ச்சியிலே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

2. மகேஷ் பாபுவின் மகளின் கலக்கல் ஃபர்பாமென்சில் ட்ரெண்டாகும் ‘பென்னி’ பாடல்...

பிரபல தெலுங்கு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்காரு வாரி பட்டா’. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருக்கு ‘பென்னி’ எனும் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. இதில் மகேஷ் பாபுவுடன் அவரின் மகள் சித்தாரா கட்டமனேனியும் நடனமாடியுள்ளார்.

3. 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த விஜய்யின் பீஸ்ட் பாடல்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜும்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

200 மில்லியனை கடந்து தொடர் சாதனை படைக்கும் அரபிக்குத்து; ஹீரோவாகும் ’கோமாளி’ புகழ்..! - சினி அப்டேட்ஸ்

முதல் சிங்கிளாக வெளியான அரபிக் குத்து பாடல் யூட்யூப்பில் 200 மில்லியன் பார்வைகளை சாதனை படைத்துள்ளது. உலகமுழுக்க ட்ரெண்டாகி பலரும் அரபிக் குத்து பாடலுக்கு விஜய் ஆடியது போலவே நடனமாடி வீடியோக்களை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. ‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கு ‘வாடிவாசல்’ மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் மே மாதம் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது. அந்த தளத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories