சினிமா

சினிமா துளிகள்: சமந்தாவுடன் இணைந்த ஹாலிவுட் பிரபலம்; மிரள வைத்த நானியின் ‘தசரா’ ஸ்பார்க்..!

சினிமா துளிகள்: சமந்தாவுடன் இணைந்த ஹாலிவுட் பிரபலம்; மிரள வைத்த நானியின் ‘தசரா’ ஸ்பார்க்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? உறுதிப்படுத்திய பிரபல டிஜிட்டல் தளம்...

அஜித் - எச். வினோத் கூட்டணியில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. கடந்த மாதம் திரைக்கு வந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் ஆரவாரத்தோடு திரையரங்கில் படத்தை கொண்டாடினர். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்திற்கு இணைய இருக்கும் நிலையில் வலிமை படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் ஜி5 தளத்தில் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. காளி கையில் துப்பாக்கி வைரலாகும் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ பட போஸ்டர்...

‘ஒத்த செருப்பு’ படத்தை தொடர்ந்து பார்த்திபனின் அடுத்த புது முயற்சியாக உருவாகி வரும் படம் தான் ‘இரவின் நிழல்’. இந்த படத்தை ஒரே ஷாட்டாக எடுத்து முடித்துள்ளார். உலகளவில் இது போன்ற முயற்சியில் சில படங்கள் வெளியாகிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

3. சைக்கோ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி..!

தமிழை தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. கடைசியாக இவர் நடித்து வெளியாகி ‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்து வியந்த இயக்குனர் மிஷ்கின் விஜய் சேதுபதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மிஷ்கின் - விஜய் சேதுபதி காம்போவில் ஒரு படம் கமிட்டாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பிசாசு 2’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு கேமியோ நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படம் உறுதியானால் இது இவர்கள் இணையும் இரண்டாவது படமாக அமையும்.

4. சமந்தாவின் படத்திற்கு சண்டை காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்...

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் பேன் இந்திய திரைப்படம் ‘யசோதா’. ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைத்து வருகிறார்.

சினிமா துளிகள்: சமந்தாவுடன் இணைந்த ஹாலிவுட் பிரபலம்; மிரள வைத்த நானியின் ‘தசரா’ ஸ்பார்க்..!

விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யானிக் பென் வரவழைக்கப்பட்டுள்ளார். படத்தின் முழு படப்பிடிப்பும் இந்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

5. ரசிகர்களை மிரள வைத்த நானியின் ‘தசரா’ ஸ்பார்க் வீடியோ...!

தெலுங்கு திரையுலகை தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நானி. ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த ஓடெலா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ‘தசரா’.

நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் இந்த படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் டீஸரை போல ஒரு ஸ்பார்க் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

banner

Related Stories

Related Stories