சினிமா

”பதறாம இருந்தா.. பீஸ்ட்டு நீதான்டா..” : விஜய் குரலில் வெளியானது ஜாலியோ ஜிம்கானா பாடல்!

பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா வெளியானது.

”பதறாம இருந்தா.. பீஸ்ட்டு நீதான்டா..” : விஜய் குரலில் வெளியானது ஜாலியோ ஜிம்கானா பாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 65வது படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில்,சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்துள்ளனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் கடந்த மாதம் வெளியாக பட்டித்தொட்டியெங்கும் பட்டையக்கிளப்பி பில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட்-ன் இரண்டாவது சிங்கிள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதன்படி ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் இன்று (மார்ச் 19) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். கடைசியாக மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை விஜய் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜாலியோ ஜிம்கானா பாடலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பாடலின் வரிக்கு ஏற்றார் போல் துள்ளலான காட்சிகளுடன் கலர்ஃபுல்லாக இருப்பதால் அரபிக் குத்து பாடலை போல இந்த பாடலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் #BeastSecondSingle , #JollyoGymkhana ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories