சினிமா

சினிமா செய்திகள் : ’பக்கெட்டில் பிரியாணியுடன் டில்லி வருவார்’ - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்!

சினிமா செய்திகள் : ’பக்கெட்டில் பிரியாணியுடன் டில்லி வருவார்’ - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த நடிகர் சதீஷ்.. ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்..!

எதிர்நீச்சல், ரெமோ, பைரவா உட்பட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக குணசித்திர நடிகராக நடித்து ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிருந்தார் சதீஷ்.

தற்போது காமெடியனாக சில படங்களில் நடித்துவரும் இவர் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசி புகைப்படங்கள் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘விஜய் 66’ படத்தின் நாயகியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்..!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 66வது படத்திற்காக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லியுடன் இணைகிறார் .

இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இந்தநிலையில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது, விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தன் மகளுடன் சேர்ந்து நடமாடும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்...

தெலுங்கு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்காரு வாரி பட்டா’. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து நாளை ‘பென்னி’ எனும் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் மகேஷ் பாபுவுடன் அவரின் மகள் சித்தாரா கட்டமனேனியும் நடனமாடியுள்ளார்.

கோலிவுட்டை தன்வசப்படுத்திய இசையமைப்பாளர் அனிருத்..! ஒரே நேரத்தில் இத்தனை முக்கிய படங்களா?

தமிழ் சினிமாவில் இப்போது அனிருத் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமப்பாளராக இருந்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

சினிமா செய்திகள் : ’பக்கெட்டில் பிரியாணியுடன் டில்லி வருவார்’ - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்!

இவர் வசம் தற்போது ரஜினியின் 169வது படம், கமலின் ‘விக்ரம்’, விஜய்யின் ‘பீஸ்ட்’, அஜித்தின் 62வது படம், சிவகார்த்திகேயனின் ‘டான்’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெயிட்டிங்கிள் உள்ளது. இதனால் கோலிவுட்டின் பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார் அனிருத்.

விசித்திரமாக உருவாகியுள்ள மம்முட்டியின் புதிய பட டீஸர்...

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

மம்முட்டி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் வித்யாசமான டீஸர் படத்தின் மீதான எதிர்ப்பார்பை அதிகரித்துள்ளது. மதிய நேர தூக்கம் தான் இந்த படத்தின் ஒன்லைன் என்பதை டீஸர் உறுதிப்படுத்தியுள்ளது.

கூடிய விரைவில் ‘கைதி 2’ - இயக்குனர் அளித்த நச் பதில்...

கமலின் ‘விக்ரம்’ படத்தில் கவணம் செலுத்திவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

சினிமா செய்திகள் : ’பக்கெட்டில் பிரியாணியுடன் டில்லி வருவார்’ - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்!

அப்போது லோகேஷ் அளித்த பேட்டியில் அவரின் அடுத்த படமாக ‘கைதி 2’ இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். டில்லி மீண்டும் எப்போது பக்கெட்டில் பிரியாணி எடுத்துக்கொண்டு லாரியில் வருவார்? என நிரூபர் கேட்ட கேள்விக்கு “கூடிய சீக்கிரம் வருவார்” என பதிலளித்துள்ளார்.

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தமிழ் சினிமாவின் 80களின் நாயகன்...

தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் பல படங்கள் மற்றும் பாடல்கள் மூலமாக பிரபலமானவர் தான் தியாகராஜன். நடிகர் பிரஷாந்தின் தந்தையான இவர் தற்போது அதிகமாக படங்கள் நடிப்பதில் கவணம் செலுத்துவதில்லை.

சினிமா செய்திகள் : ’பக்கெட்டில் பிரியாணியுடன் டில்லி வருவார்’ - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்!

கடைசியாக செக்கச்சிவந்த வானம், பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘டெட்லி கோஸ்ட்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருவதாக சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories