சினிமா

முக்கிய நடிகர்கள் நடிக்கும் 'மாமன்னன்' : உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட டைட்டில் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ‘மாமன்னன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

முக்கிய நடிகர்கள் நடிக்கும் 'மாமன்னன்' : உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட டைட்டில் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை போனி கபூரின் பேவியூ நிறுவனம் தயாரித்துள்ளது. அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார். இந்தியில் வெளியான ஆர்ட்டிகிள் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்துள்ள இந்த படத்திற்கு மாமன்னன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மேலும் நடிகர் வடிவேலு, பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவிற்கு பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய முக்கிய படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories