சினிமா

மீண்டும் திரையில் இணைகிறது கோலிவுட்டின் சூப்பர் கூல் ஜோடி: அண்மை தகவலால் குஷியில் 90s ரசிகர்கள்!

மீண்டும் திரையில் இணைகிறது கோலிவுட்டின் சூப்பர் கூல் ஜோடி: அண்மை தகவலால் குஷியில் 90s ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களுக்கு பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியிருக்கிறது.

அந்த வகையில், பாண்டிராஜ் இயக்கத்திலான எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மேலும் கியர் கொடுத்திருக்கிறது.

இப்படி இருக்கையில், தமிழ் சினிமாவின் சூப்பர் கூல் ஜோடியாக இருப்பதில் சூர்யா-ஜோதிகா ஜோடியும் ஒன்று. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜோதிகா நடித்திருந்தாலும் திருமணமான பிறகு இருவரும் இணைந்து இதுவரையில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மீண்டும் திரையில் இணைகிறது கோலிவுட்டின் சூப்பர் கூல் ஜோடி: அண்மை தகவலால் குஷியில் 90s ரசிகர்கள்!

அந்த எதிர்ப்பார்ப்பு விரைவில் நிறைவேற இருக்கிறது. அதன்படி, எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு பாலாவின் இயக்கத்திலான படத்தில் சூர்யா நடிக்கிறார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என அவரே எதற்கும் துணிந்தவன் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாலா இயக்கத்திலான அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories