சினிமா

’வேட்டிய கட்டினா ஜட்ஜே நான்தான்’ - பொறி பறக்கும் வசனங்களுடன் வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

’வேட்டிய கட்டினா ஜட்ஜே நான்தான்’ - பொறி பறக்கும் வசனங்களுடன் வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரெய்லர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது எதற்கும் துணிந்தவன் படம். சூர்யாவின் 40வது படமாக உருவாகியுள்ள இதில் வினய், சத்யராஜ், பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மார்ச் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் நாயகனாக வருகிறார் சூர்யா. பெண்கள் மீதான சமூகத்தின் அலட்சியத் தன்மையை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வசனங்கள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

அதில், “இந்த ஊருக்கு வாய் மட்டும்தான் இருக்கும், காது இருக்காது , பொண்ணுங்கனாலே பலவீனமானவங்கனு நினைச்சுட்டு இருக்காங்க, இல்ல பலம்னு ஆக்கனும்” போன்ற வசனங்கள் வரவேற்பை பெற்று வருகிறது.

வெகு நாட்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ட்ரெய்லரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories