சினிமா

பிரபல மலையாள நடிகை காலமானார்.. கண்ணீரில் திரையுலகம்!

பிரபல மலையாள நடிகை லலிதா (73), உடல்நலக்குறைவால் கொச்சியில் காலமானார்.

பிரபல மலையாள நடிகை காலமானார்.. கண்ணீரில் திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை லலிதா. இவர் கடந்த ஆண்டு முதலே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள மகன் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் நேற்று நடிகை லலிதா காலமானார்.

இவர் 1969ம் ஆண்டு கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான 'கூட்டுக்குடும்பம்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில், காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ ,'காற்று வெளியிடை' என தமிழ், மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

லலிதா இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். நான்கு முறை கேரள அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மறைந்த லலிதாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories