சினிமா

‘நினைச்சுக்கூட பாக்கலை இப்படியாகும்னு’ - பிரபல தொகுப்பாளினி மரணத்தால் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

ரேடியோ மெர்ச்சி ஆர்.ஜே. மற்றும் கன்னட பட நடிகையுமான ரச்சனாவின் திடீர் மரண செய்தியால் திரையுலகத்தினர் அதிர்ச்சி.

‘நினைச்சுக்கூட பாக்கலை இப்படியாகும்னு’ - பிரபல தொகுப்பாளினி மரணத்தால் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல வானொலி தொகுப்பாளினி திடீரென உயிரிழந்ததால் கன்னட திரையுலகத்தில் அதிர்ச்சி. அவருக்கு வயது 39.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனத்துடன் இருக்கக் கூடிய பெங்களூருவைச் சேர்ந்த பிரபல வானொலி தொகுப்பாளினி (radio jockey) ரச்சனா நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கன்னட திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘Pori Tapori Rachana’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பெங்களூரு மக்களிடையே ரச்சனா மிகவும் பிரபலம். ரேடியோ மிர்ச்சி FMல் பத்தாண்டுகளாக பணியாற்றியவர் ரச்சனா.

பண்பலை மூலம் தன்னுடைய திறமையான பேச்சாற்றலால் மக்கள் தன்வசப்படுத்தி ரச்சனாவின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை திடுக்கிடச் செய்திருக்கிறது.

உடல்நலத்திலும், ஆரோக்கியத்திலும் மிகவும் கவனமாக இருக்கக் கூடிய ரச்சனா நேற்று (பிப்.,22) பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

Simpleagi Ondu Love Story என்ற கன்னட திரைப்படத்திலும் ரச்சனா நடித்திருக்கிறார். அவரது மறைவுச் செய்தியை அறிந்த திரையுலகத்தினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories