சினிமா

வலிமை ரிலீஸ்; AK61 அப்டேட்: Code word accepted; இரட்டிப்பு மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் !

வலிமை ரிலீஸ்; AK61 அப்டேட்: Code word accepted; இரட்டிப்பு மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடங்கி வலிமை என நீண்ட போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணி தற்போது அவரது 61வது படத்திலும் இணைந்திருக்கிறது.

பிப்ரவரி 24ம் தேதி வலிமை படத்தின் வெளியீட்டுக்காக படக்குழு தயாராகி வரும் வேளையில், தற்போது அஜித்தின் 61வது படத்தின் முன்னோட்ட வேலைகளும் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வலிமை ரிலீஸான கையோடு அஜித்தின் 61வது படத்துக்கான வேலைகளை படக்குழு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், அண்மைத் தகவலாக மார்ச் 9ம் தேதி AK61 ஷூட்டிங் தொடங்கப்படும் எனவும், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா சாலை போன்று ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட இருப்பதாகவும் கோலிவுட் தரப்பினர் கூறுகின்றனர்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புதுவித கெட்டப்புடன் வந்த அஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

அதில், நடிகர் அஜித்குமார் நீண்ட தாடியுடன், கருப்பு கோட், காதில் கம்மல், கோல்டன் ஃப்ரேம் கண்ணாடி என ஸ்டைலாக இருந்துள்ளார். இந்த நிலையில், வைரலான புகைப்படத்தில் இருந்த அஜித்தின் லுக்தான் அவரது 61வது படத்துக்கான கெட்டப் என்பதை தயாரிப்பாளர் போனி கபூரே ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories