சினிமா

மீண்டும் இணைந்தது வேதாளம் கூட்டணி: வெளியானது அஜித் 61 பட புது அப்டேட்; இரட்டிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்

வலிமை படம் வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் 61வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணைந்தது வேதாளம் கூட்டணி: வெளியானது அஜித் 61 பட புது அப்டேட்; இரட்டிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக நான்கு படங்களில் நடித்த அஜித்குமாரின் ஃபார்முலா ஹெச்.வினோத்திடமும் தொடர்கிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடங்கி வலிமை என நீண்ட போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணி தற்போது அவரது 61வது படத்திலும் இணைந்திருக்கிறது.

ஏற்கெனவே வெளியான தகவலாக இருந்தாலும் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி முன்பு வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தான் அஜித் 61 படத்துக்கும் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோக, ஞாயிறு ஊரடங்கு இல்லாதபட்சத்தில் அஜித் 61 படத்தின் பூஜை ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என்றும் ஜனவரி மாதம் இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ படபிடிப்பு வேலைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13ம் தேதி வலிமை படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் அஜித் 61 குறித்த தகவல் வெளியானது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories