சினிமா

அரபிக் குத்து ஃபார்மில் விஜய் ரசிகர்கள்: போஸ்டர் வெளியிட்டு குஷிப்படுத்திய படக்குழு; வைரலாகும் ஃபோட்டோ!

காதலர் தினத்தை முன்னிட்டு விஜயின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில் போஸ்டர் வெளியிட்டுள்ளது சன்பிக்சர்ஸ்.

அரபிக் குத்து ஃபார்மில் விஜய் ரசிகர்கள்: போஸ்டர் வெளியிட்டு குஷிப்படுத்திய படக்குழு; வைரலாகும் ஃபோட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் 65வது படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் படமாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏப்ரலில் வெளியாகும் என்பதை மட்டுமே தெரிவித்துள்ளது. இப்படி இருக்கையில், படத்தின் புரோமோஷன் உள்ளிட்ட பிற வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தொடர்பான வீடியோவை கடந்த பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டு விஜய் ரசிகர்களை படக்குழு குஷிப்படுத்தியது படக்குழு. டாக்டர் பட பாடல் வெளியீட்டு பாணியிலேயே இந்த அப்டேட்டையும் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் தங்களுக்கே உரிய பாணியில் கொடுத்துள்ளனர்.

அதன்படி ‘அரபிக் குத்து’ என்ற புதுவகை பாடலை இயற்றியிருப்பதாக கூறியுள்ளனர். இந்த பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ 1.6 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயனின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியிருப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அரபிக் குத்து ஃபார்மில் ரசிகர்களை தயார்படுத்த விஜய்யும், பூஜா ஹெக்டேவும் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பு நிர்வாகம். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories