அரசியல்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை! : கே.என்.நேரு பேட்டி!

“சோதனை, கைது உள்ளிட்டவற்றை ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தி.மு.க எப்படி எதிர்கொண்டதோ, அதேபோல் இந்த ஆட்சியிலும் எதிர்கொள்வோம்.”

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை! : கே.என்.நேரு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு இல்லத்தில் இன்று (அக்.29) காலை 7 மணி முதல் சுமார் 7 மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு தெரிவித்ததாவது,

“இந்த முறையும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அதிக இடங்களில் சோதனை செய்துள்ளார்கள்.

சட்டம் - ஒழுங்கு சீர்கெடுகள், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தது உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம். இது குறித்து எங்கள் கட்சித் தலைவர் கூறியது சரிதான்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை! : கே.என்.நேரு பேட்டி!

ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை கைது செய்துள்ளார்கள். இன்று என் வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளார்கள். திசை திருப்பத்தான் இதை செய்கிறார்கள்.

சோதனை, கைது உள்ளிட்டவற்றை ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தி.மு.க எப்படி எதிர்கொண்டதோ, அதேபோல் இந்த ஆட்சியிலும் எதிர்கொள்வோம். ஜெயலலிதா காலத்தில் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்றதைபோல், இப்போதும் வெற்றிபெறுவோம்.

திரைத்துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். தி.மு.க என்றுமே நிலைத்திருக்கும். தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் திமுக என்றைக்குமே நிலையாக நிற்கும்.”

banner

Related Stories

Related Stories