சினிமா

தொடங்கியது நடிகர் தனுஷின் 'வாத்தி' படத்திற்கான படப்பிடிப்பு!

நடிகர் தனுஷின் வாத்தி படப்பிடிப்பு பூஜை இன்று தொடங்கியது.

தொடங்கியது நடிகர் தனுஷின் 'வாத்தி' படத்திற்கான படப்பிடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டில் தொடங்கிய நடிகர் தனுஷின் சினிமா பயணம் பாலிவுட், ஹாலிவுட் என பரந்து விரிந்திருக்கிறது. தற்போது தென்னிந்திய சினிமாவின் அங்கமாக உள்ள தெலுங்கிலும் தனது கால் பதித்துள்ளார்.

இந்த படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும் தமிழில் 'வாத்தி' என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கில் இந்த படத்தை ஒரேநேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

'வாத்தி' படத்தை சித்தாரா என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. தெலுங்கில் பிரபலமான வெற்றிப் படங்களைக் கொடுத்த வெங்கி அட்லூரியின் தான் இந்தப் படத்தின் இயக்குநர்.

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் தனுஷ் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த படத்திற்கான ஆவல் இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் 'வாத்தி' படத்திற்கான படப்பிடிப்பு பூஜை இன்று தொடங்கியது. இதில் நடிகர் தனுஷ், நாயகி சம்யுக்தா மேனன், இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானை அடுத்து நடிகர் தனுஷ் ரசிகர்கள் 'வாத்தி' படத்தின் பூஜை படங்களை வைரலாகி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories