சினிமா

வலிமை ரிலீஸ் தேதி வெளியானது : நாயகியின் இன்ஸ்டா ஸ்டோரியால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

வலிமை பட ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம்.

வலிமை ரிலீஸ் தேதி வெளியானது : நாயகியின் இன்ஸ்டா ஸ்டோரியால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஸ்வாசம் படத்துக்கு பிறகு அஜித் குமாரின் 60வது படமான வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.

அவர்களின் காத்திருப்புக்கு பதில் கொடுக்கும் விதமாக வலிமை படக்குழு தரப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அஜித்தின் வலிமை பட போட்டோக்கள், மேக்கிங் வீடியோ, க்லிம்ப்ஸ் என பல்வேறு அப்டேட்களை விட்டதோடு 2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வலிமை ரிலீஸ் தேதி வெளியானது : நாயகியின் இன்ஸ்டா ஸ்டோரியால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆனால் படம் ரிலீஸாகும் தேதியை இதுவரை படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்தின் நாயகியாக உள்ள ஹூமா குரேஷி, அஜித்துடன் இருப்பது தான் போன்ற போட்டோவை ஷேர் செய்து அதில் ‘#Thalavarar , #Jan13, #valimaipongal2022 என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து வலிமை படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸாக இருக்கிறது எனக் குறிப்பிடும் வகையில் #ValimaiJan13 என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories