சினிமா

லண்டன் தியேட்டரில் ரிலீசாகும் ’வலிமை’ : அண்மை தகவலால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

வலிமை ட்ரெய்லர் தகவலை அடுத்து அதன் மேஷ் அப் தொடர்பான தகவல் ட்விட்டரில் பேசு பொருளாகியுள்ளது.

லண்டன் தியேட்டரில் ரிலீசாகும் ’வலிமை’ : அண்மை தகவலால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் குமாரின் 60வது படமாக உருவாகியுள்ள வலிமை வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டே ரிலீசாக இருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போடப்பட்டு ஒருவழியாக வெளியாக இருக்கிறது. படத்தின் மீது அஜித் உட்பட சினிமா ரசிகர்களின் ஆவலும் எதிர்பார்ப்பும் அண்மையில் இயக்குநர் ஹெச்.விநோத்தின் நேர்காணல் மூலம் மேலும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே வலிமை படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் வெளியான நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் வலிமை ட்ரெய்லர் டிசம்பர் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அஜித் ரசிகர்கள் ValimaiTrailerFeast என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில், ValimaiMashup என்ற ஹேஷ்டேக்கும் அதனூடே ட்ரெண்ட் ஆகி வருகிறது.

என்னவெனில், மனோஜ் மேடி எடிட்ஸ் என்ற படத்தொகுப்பு செய்த வலிமை படத்தின் மேஷ் அப் வீடியோ லண்டனில் உள்ள திரையரங்கில் திரையிடுவதற்காக கேட்டுள்ளதாக தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதனையடுத்து அஜித் ரசிகர்கள் அது என்ன வீடியோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இன்னும் வலிமை மேஷ் அப் வெளியிடப்படவில்லை என மனோஜ் மேடி அதற்கு பதிலளித்துள்ளார். தற்போது இந்த ட்வீட்தான் சமூக வலைதளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக மனோஜ் மேடி என்பவர் சுயமாக அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திரைப்பயண வீடியோக்களை மேஷ் அப் ஆக உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரது மேஷ் அப் கேரளா போன்ற மாநில திரையரங்குகளில் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்று வருகிறது. தற்போது அவர் உருவாக்கியுள்ள வலிமை படத்தின் மேஷ் அப் இந்தியாவை தாண்டி லண்டனில் உள்ள தியேட்டரில் வெளியாக இருப்பதற்கு பெருமளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories