சினிமா

”தடுமாறி விழலாம்; ஆனால் மீண்டும் எழுந்து வரனும்” - வலிமை மேக்கிங் வீடியோவை வைரலாக்கும் அஜித் ரசிகர்கள்!

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித், கார்த்திகேயா இருவரும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, ஸ்டண்ட் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

”தடுமாறி விழலாம்; ஆனால் மீண்டும் எழுந்து வரனும்” - வலிமை மேக்கிங் வீடியோவை வைரலாக்கும் அஜித் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

வெகுநாட்களாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்ததால் செல்லும் இடமெல்லாம் அஜித் ரசிகர்கள் valimai update என தொடர்ந்து கேட்டு வந்தனர். அதன்படி அண்மையில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், இரண்டு பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித், கார்த்திகேயா இருவரும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, ஸ்டண்ட் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதுபோக, அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது விழுந்து எழுந்து மீண்டும் பைக் ஓட்டும் காட்சியும் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மகாத்மா காந்தியின் பொன்மொழிகளும் அந்த மேக்கிங் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவையும் அதில் வரும் காட்சிகளையும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் ப்ளாக் பஸ்டராகும் என ரசிகர்கள் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து ட்விட்டரில் #valimai , #valimaipromo , #valimaipongal போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

banner

Related Stories

Related Stories