சினிமா

’அத்ரங்கி ரே’ படத்தை இயக்கியது ஏ.ஆர்.ரஹ்மானா? - ரசிகர்கள் பூரிப்பு; இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

இந்திய சினிமாவுக்கு ஆனந்த் ராய் போன்ற இயக்குநர்கள் இன்னும் தேவை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

’அத்ரங்கி ரே’ படத்தை இயக்கியது ஏ.ஆர்.ரஹ்மானா? - ரசிகர்கள் பூரிப்பு; இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஞ்சனா படத்தை தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் அத்ரங்கி ரே. தமிழில் கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியானது.

தனுஷன் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் பாடல்களும் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தின் முடிவில் a film by என இயக்குநர் பெயர் இடம்பெறும் இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் முதலில் வந்ததை கண்ட அவரது ரசிகர்கள் பூரித்துப் போயுள்ளனர்.

’அத்ரங்கி ரே’ படத்தை இயக்கியது ஏ.ஆர்.ரஹ்மானா? - ரசிகர்கள் பூரிப்பு; இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

இதனையடுத்து ரசிகர் ஒருவர் ரஹ்மானின் இன்ஸ்டாகிராம் கமென்ட் செக்‌ஷனில், உங்களுக்காகவே அத்ரங்கி ரே படம் பார்த்தேன். இசை அருமையாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. படத்தை உங்களுக்கு அர்ப்பணிப்பது போல a film by A.R.Rahman என இயக்குநர் ஆனந்த் ராய் செய்தது பிரமிப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ஆனந்த் ராய் போன்ற இயக்குநர்கள் இந்தியாவுக்கு மேலும் தேவை. இசையமைப்பாளர்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், மரியாதையும் என்னை மேலும் மெனக்கெட வைக்க உதவியது என தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories