சினிமா

6 ஆஸ்கர் வாங்கிருக்கு அது Overrated ah? - தனுஷ் பேச்சால் உலக சினிமா ரசிகர்கள் கொதிப்பு! (ViralVideo)

காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருது பெற்ற படம் குறித்து நடிகர் தனுஷ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

6 ஆஸ்கர் வாங்கிருக்கு அது Overrated ah? - தனுஷ் பேச்சால் உலக சினிமா ரசிகர்கள் கொதிப்பு! (ViralVideo)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஞ்சனா, ஷமிதாப் படங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக இருக்கிறது அட்ரங்கி ரே படம்.

இதில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அட்ரங்கி ரே உருவாகியுள்ளது.

ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் புரோமோஷன் வேலைகளும் இதனூடே நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், பாலிவுட்டின் பிரபலமான உரையாடல் நிகழ்ச்சியான இயக்குநர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரனில் தனுஷும் சாரா அலிகானும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது, அனுராக் காஷ்யப், சஞ்சய் பன்சாலி, ஸோயா அக்தர், ராஜமவுளி, ஷங்கர் அல்லது நான் என இந்தியாவில் எந்த இயக்குநருடன் நீங்கள் அடுத்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என கரன் ஜோஹர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தனுஷ் ராஜமவுளி என பதிலளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வந்த படங்களில் எது ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதாக உங்களுக்கு தோன்றியது என கரன் ஜோஹர் கேட்டிருந்தார்.

அதற்கு கடந்த ஆண்டின் சிறந்த படம் உட்பட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட்-ஐ குறிப்பிட்டிருந்தார். இந்த பதில் பாராசைட் படத்தின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories