சினிமா

பாலிவுட்டில் மாஸ் என்ட்ரி; கிறிஸ்துமஸ் பரிசாக வெளியானது VJS-ன் PAN INDIA படத்தின் அறிவிப்பு!

3 தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் மாஸ் என்ட்ரி; கிறிஸ்துமஸ் பரிசாக வெளியானது VJS-ன் PAN INDIA படத்தின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் 2018ம் ஆண்டு இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அந்தாதுன். மியூசிக்கல் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படத்துக்கு மூன்று தேசிய விருது கிடைத்தது.

இந்த படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் அடுத்த படத்தில்தான் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கத்ரீன கைஃப் நடிக்கிறார். மெர்ரி கிறிஸ்துமஸ் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை 2022 கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கில் கொடி நாட்டியதை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் தன் தடத்தை பதிக்க இருக்கிறார். ஏற்கெனவே அமீர் கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இருந்த போதும் சில பிரச்னைகள் காரணமாக அது கை கூடவில்லை.

தற்போது இந்த படத்தின் மூலம் இந்தி திரையுலகின் காலெடுத்து வைக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுபோக, விக்கி கவுஷலுடனான திருமணத்துக்கு பிறகு கத்ரீனா கைஃப் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது படத்தின் மீதான் அஎதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories