சினிமா

விஜய்யுடன் யுவன் ஷங்கர் ராஜா திடீர் சந்திப்பு... மீண்டும் அமைகிறதா கூட்டணி..? - பின்னணி என்ன?

நடிகர் விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

விஜய்யுடன் யுவன் ஷங்கர் ராஜா திடீர் சந்திப்பு... மீண்டும் அமைகிறதா கூட்டணி..? - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யின் 65வது படமான ‘பீஸ்ட்’ அடுத்தாண்டு ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது.

பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததையடுத்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து விஜய், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார். ‘தளபதி 66’ என்றழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். விஜய்யை யுவன் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தக் கூட்டணி, விஜய்யின் 67வது படத்தில் இணையும் எனக் கூறப்படுகிறது. விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ல் வெளியான ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு விஜய்யின் எந்தப் படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை.

இந்நிலையில் நீண்ட காலம் கழித்து இருவரும் சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து விஜய் – யுவன் கூட்டணியில் மீண்டும் படம் அமையுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories