சினிமா

மீண்டும் இணைகிறதா ரஜினி - ராஜா கூட்டணி? 28 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான கோலிவுட்!

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான பால்கி ரஜினியை சந்தித்து கதை ஒன்றினை கூறியிருப்பதாகவும் அது பான் இந்தியா படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் இணைகிறதா ரஜினி - ராஜா கூட்டணி? 28 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான கோலிவுட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுத்தை சிவா உடனான அன்னாத்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினியின் 169வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற கேள்வி கோலிவுட்டில் பம்பரமாக சுற்றி வருகிறது.

அதன்படி இளம் இயக்குநர்கள் ஐவர் ரஜினியிடம் ஒன்லைன் கூறியிருப்பதாகவும் அது ரஜினிக்கு பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்தன.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் நல்ல கதையாக தயார் செய்யும்படி ரஜினி கூறியிருப்பதாக கோடம்பாக்கம் சுற்றத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இதனிடையே பாலிவுட்டின் பிரபல இயக்குநரான பால்கி ரஜினியை சந்தித்து கதை ஒன்றினை கூறியிருப்பதாகவும் அது பான் இந்தியா படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு பால்கி உடனான இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியானால் அந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளராக இளையராஜா இருந்தவர். ஏற்கெனவே சீனி கம், பா, கி அண்ட் கா போன்ற பால்கியின் பாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதுபோக, இந்த மூவர் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் இளையராஜாவும் இணையும் படமாக இருக்கும். முன்னதாக 1994 ம் ஆண்டு வெளியான வீராதான் இவர்களது கூட்டணியில் வெளியான கடைசி படமாகும்.

banner

Related Stories

Related Stories