சினிமா

”கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய..” காதல் ததும்ப ’காத்து வாக்குல’ பட அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

”கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய..” காதல் ததும்ப ’காத்து வாக்குல’ பட அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களாலும், திரையுலகினராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா.

தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் கலக்கி வரும் நயன்தாராவின் அடுத்த படமாக உருவாகி வருகிறது காத்துவாக்குல ரெண்டு காதல்.

இரட்டை கதாநாயகிகளை கொண்ட படமான இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் Two Two Two பாடல் குழந்தைகள், இளசுகள் என அனைவரிடத்திலும் பட்டையக் கிளப்பி லட்சக் கணக்கில் லைக்ஸ்களையும் பார்வையாளர்களை பெற்று வருகிறது.

இதுபோக, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் பேருந்தில் பயணிப்பது போன்ற போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பை இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில், நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் என காதல் வழிய புகைப்படங்களோடு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, நயன், சமந்தா கதாப்பாத்திரங்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

தற்போது நயன் டப்பிங் குறித்த அப்டேட் வெளியானதை அடுத்து படத்தின் மீதான ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories