சினிமா

மீண்டும் தள்ளிப்போனது ’மாநாடு’ ரிலீஸ்; தயாரிப்பாளரின் அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் நாளை வெளியாக இருந்த நிலையில் ரத்தாகிறது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் தள்ளிப்போனது ’மாநாடு’ ரிலீஸ்; தயாரிப்பாளரின் அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் என பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியிருந்தது.

அதே ஆவலுடன் நாளை (நவ.,25) படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நாளை மாநாடு படம் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அதில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தீபாவளிக்கு ரிலீசாக இருந்த படம் நாளை ரிலீசாக இருந்த நிலையில் தற்போது அதுவும் தள்ளிப்போனதால் சிம்பு ரசிகர்களை கவலை சூழ்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories