சினிமா

”பிரச்னையை நான் பாத்துக்குறேன்; என்ன மட்டும் நீங்க பாத்துக்கங்க” - மாநாடு பட விழாவில் கண் கலங்கிய சிம்பு!

‘மாநாடு’ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கண் கலங்கிய சிம்பு.

”பிரச்னையை நான் பாத்துக்குறேன்; என்ன மட்டும் நீங்க பாத்துக்கங்க” - மாநாடு பட விழாவில் கண் கலங்கிய சிம்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாநாடு’ படத்தின் வெளியீட்டிற்காக சிம்பு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தீபாவளியில் இருந்து தள்ளிபோய் நவம்பர் 25க்கு மாற்றி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா இன்று கோலாகலமாக நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்ட படக்குழுவினர் ‘மாநாடு’ திரைப்படம் உருவானது குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நிறைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு அனைவருக்கும் நன்றி சொல்லி தனது உரையை துவங்யிருந்தார். இறுதியாக “எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்குறாங்க, படத்த ரிலீஸ் பண்ண விடமாட்றாங்க, எல்லா பிரச்சனையும் நான் பாத்துகுறேன், என்ன மட்டும் நீங்க பார்த்துக்கோங்க” என கூறி கண்ணீரோடு விடைப்பெற்றார்.

இதைக்கண்ட சிம்புவின் ரசிகர்கள் “நீங்க இல்லாம நாங்க இல்ல, நாங்க இருக்கோம் எஸ்.டிஆர்” என ஆக்ரோஷமாக முழக்கமுட்டனர். இந்த நிகழ்வு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது

banner

Related Stories

Related Stories