சினிமா

“பால் வாக்கரின் மகளுக்கும் தந்தை ஸ்தானத்தில் திருமணம் நடத்தி வைத்த வின் டீஸல்” : நெகிழ்ச்சி சம்பவம்!

பால் வாக்கரின் மகளின் திருமணத்தை ஸ்தானத்தில் வின் டீஸல் நடத்தி வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பால் வாக்கரின் மகளுக்கும் தந்தை ஸ்தானத்தில் திருமணம் நடத்தி வைத்த வின் டீஸல்” : நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். மேலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தவர்.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஒரு கோர விபத்தில் எதிர்பாராத விதமாக பால் வாக்கர் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் அவர்களது ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று பால் வாக்கரின் மகளின் திருமணத்தை ஸ்தானத்தில் வின் டீஸல் நடத்தி வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் வாக்கரின் மகள் மெடோ வாக்கரின் மகளுக்கு நடைபெற்ற திருமணத்தின் போது, பால் வாக்கருக்கு பதிலாக அவரது நண்பரும், சக நடிகருமான வின் டீஸல் மனப் பெண்ணின் கைகளைப் பிடித்து அழைத்து வந்து, தந்தை வின் டீசல், மறைந்த தனது நண்பர் பால் வாக்கரின் நினைவாக தனது மகளுக்கு பால் என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories